தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

கடந்து ஆண்டு இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு மொத்தம் 1,550 தொழுநோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 173 வழக்குகள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 வழக்குகளும் முறையே 168 மற்றும் 151 வழக்குகள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளன.

மாணவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பிற்கான காரணத்தை கண்டறியும் தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின்படி, நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று தொற்றக்கூடியது மற்றும் தொற்றாதது. துரதிர்ஷ்டவசமாக, கண்டறியப்பட்ட வழக்குகளில், 60 வீதமானவை தொற்றக் கூடியது எனவும் இது பரவுவதற்கான அதிக அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நோய்த்தொற்று மற்றும் தொற்றாத வடிவங்கள் இரண்டிற்கும் தீர்வு காண ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரம் வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin