இந்த ஆண்டு இடம்பெறவுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டில் (2024) ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வு இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு அமர்வு ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும், மேலும், உலக பாரம்பரிய மாநாட்டை செயற்படுத்துவது இந்த குழுவின் பொறுப்பாகும்.
இந்த மாநாடு உலக பாரம்பரிய நிதியின் பயன்பாட்டை வரையறுத்து மாகாணக் கட்சிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் பேரில் நிதி உதவியை வழங்கிட வழிவகுக்கும்.
மேலும், அபாயகரமான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருந்து சொத்துகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவுகள் குறித்தும், உலகப் பாரம்பரியப் பட்டியலில் புதிய சின்னம் சேர்க்கப்படுமா என்பது குறித்தும் இறுதிக் கருத்தை இந்த ஆணையம் வெளியிடும்.
தவிரவும் உலக பாரம்பரியக் குழுவானது 21 மாநிலக் கட்சிகளைக் கொண்டுள்ளது, ஆறு வருடத்திற்கு ஒரு முறை பொது தேர்தல் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.