எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயண சீசன் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
உயர்தரப் பொதுத் தரப் பரீட்சை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் பருவச் சீட்டு வழங்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் பல பாடசாலைகள் விடுமுறைக் காலத்தில் மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் சீசன் இடைநிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கு முன்னர் பாடசாலை விடுமுறை நாட்களில் சீசன் டிக்கெட்டை இடைநிறுத்தியது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இது தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு தெரியப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், சிறுவர்களுக்கான சிறு சிறு சலுகைகளை கூட இந்த அரசாங்கம் குறைப்பது மோசமான செயல் எனவும் அவர் தெரிவித்தார்.