கனடாவில் இருந்து அசானிக்கு வந்த வாய்ப்பு

கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக இருந்தது.

கில்மிஷாவுடன் பழகும் போது நன்றாக இருக்கும். நன்றாக பழகுவார், மக்களுக்காக வந்திருக்கிற நல்லா பாடு என கூறுவார்.

எனக்காக பலரும் ஒத்துழைத்தார்கள்,அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றி.எனக்காக பாராளுமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி.

மேலும், கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் அது பற்றிய திட்டங்கள் தெரியவரும் என்றும் அசானி குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: admin