டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த ஆண்டு அதிகம் uninstall செய்த செயலிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த 2023-ல் மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் “இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி டெலிட் செய்ய வேண்டும்” என்று தொடர்ச்சியாக கூகுளில் தேடியுள்ளனர்.
உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயத்தில் உலகளவில் உள்ள சமூக வலைதளங்களில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.