எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் மின்சார கட்டண திருத்தத்தில் பெறுமதி சேர் வரி (VAT) பாதிப்பை ஏற்படுத்தாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விலையிலும் பெறுமதி சேர் வரி பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெறுமதி சேர் வரி பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்சார கட்டணம் அடுத்த மாதம் நிரந்தரமாக குறைக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இலங்கை மின்சார சபை பலகோடி ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது