பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார்.
இது தொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ப்ரேஸ்லெட் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி.
மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு… என கூறியுள்ளார்.
இதற்கு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல வெற்றிகள் மற்றும் அன்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.