செல்போனில் தேவையான நேரத்தில் நெட்வொர்க் கிடைக்காமல் பலரும் திணறும் சூழல்களை சந்தித்திருப்போம்.
அப்படியான நேரத்தில் செய்ய வேண்டியது குறித்து பார்க்கலாம்.
Aeroplane mode / Restart
செல்போன் நெட்வொர்க்குகள் சிக்கல் கொடுக்கும் சமயங்களில் சில நிமிடங்களுக்கு ஏரோபிளேன் மோடில் வைத்து பின்னர் சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யலாம்.
இப்படி செய்வது பெரும்பாலான சமயங்களில் பலனளிக்கும்.
நெட்வொர்க் சுவிட்ச்
இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவோர் என்றால் settings-ல் சிறந்த பயன்பாட்டில் உள்ள நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கலாம்.
நெட்வொர்க்கில் தொடர்ந்து பிரச்சனை வந்தால் அதற்கு அப்டேட் கூட காரணமாக இருக்கலாம்.
அதாவது செல்போனில் அண்மைய அப்டேட்களை சரியாக இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது கூட இந்த சிக்கலை ஏற்படுத்தலாம்.