நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தனுஷ் இயக்கும் இந்த மூன்றாவது படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மூன்று பாடல்களை தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு காதல் கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தனுஷின் சகோதரியான விமலா கீதாவின் மகன் ஸ்ராவன் குமார் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை ராதிகா சமீபத்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதில் சரத்குமார் தனுஷ் படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
காதல் கதையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் அவரது 51வது படத்திற்கான படப்பிடிப்பில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.