திரைப்பட தயாரிப்பில் கால் பதித்த நடிகை சமந்தா

ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் என்கிற பெயரில் சமந்தா துவங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பல புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டிவி தொடர்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில்,

எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை கொடுப்பேன்.

புதிய சிந்தனை மற்றும் மன வெளிப்பாடு உள்ளடக்கத்தை பிரதிநிதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Recommended For You

About the Author: admin