ஊழலை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட அரசாங்கம்

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழுவை இரத்துச் செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று உத்தியோகபூர்வமாக நாட்டின் ஊழல்,மோசடியை ஏற்றுக்கொண்டுள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனக்கு அதிகாரத்தை வழங்கிய 69 லட்சம் மக்களுக்காக நான் குரல் கொடுக்கின்றேன்.ஊழல்,மோசடிகளுக்கு எதிராக செயற்படுவேன் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் செயற்படுகிறேன்.

நான் எதிர்க்கட்சிக்கு செல்ல போவாதாக கூறப்படும் கதைகள் முற்றிலும் பொய்யானவை. அரசாங்கம் இப்படியான அசிங்கமான வேலையை செய்யக்கூடாது.

இலங்கை கிரிக்கெட் சம்பந்தமான கணக்காய்வு செய்து,கணக்காய்வின் உயரிய நிறுவனம், கிரிக்கெட்டின் ஊழல் சம்பந்ததான விடயத்தை முன்வைத்தது.

ஊழல் நடைபெற்றிருந்தால், நடவடிக்கை எடுக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் ஷரத்துக்களில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய நான் நடவடிக்கை எடுத்தேன்.

இதனடிப்படையில் நான் கடந்த நவம்பர் மாதம் கொண்டு வந்த வர்த்தமானி அறிவித்தலை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று இரத்துச் செய்தார்.

இதன் மூலம் அரசாங்கம் ஊழலை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. கணக்காய்வு திணைக்களத்தை விட கணக்காய்வு செய்வதற்கு நாட்டில் எந்த உயர் நிறுவனமும் இல்லை எனவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.

இதனையடுத்து சபையில் எழுந்து நின்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.

திருடர்களை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ததாக நேற்று நடந்த சம்பவம் பற்றினர் கூறினார். அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் ஐ.சி.சியின் கவனத்திற்காக கடிதம் ஒன்றை அனுப்பினேன். நிதி அதிகாரம் ஐ.சி.சிக்கே இருக்கின்றது.அந்த கடிதத்தை சபையில் தாக்கல் செய்கின்றேன்.

2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளோம்.

ஐ.சி.சியின் தடையை நீக்கிக்கொள்வதற்காக வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டது. திருடர்களை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ததாக தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin