பொருளாதார பிரச்சினைக்கு பிளாஸ்டரால் ஒட்டுப்போட்டு தீர்வுகாண முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு ஒட்டுப்போட்டும் தீர்வுகள் காரணமாகவே நாட்டில் இந்த பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அன்று தலைமைத்துவத்தை ஏற்காமல் கைவிட்டிருந்தால், பாராளுமன்றம் இன்று சாம்பல் மேடாக இருந்திருக்கும்.
தற்போது பொருளாதாரத்தை குணப்படுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளியும் இறக்காமல் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளது எனவும் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார்.