மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு மொத்தம் 4 காரணங்கள் உள்ளன என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது, முதலில், பா.ஜ.க, சித்தாந்தம் இந்துத்துவா. இரண்டாவது தேசியவாதம். மூன்றாவது பா. ஜ.க,வின் நிதி வலிமை. நான்காவது அடித்தட்டு மக்களுக்கு உதவ அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள்.
மோடியின் இமேஜ் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், பா.ஜ.க, அதை வைத்து மட்டுமே ஓட்டுக்களை பெறுவதில்லை. எதிர்க்கட்சியினர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்,
பா.ஜ.க,வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் இந்த நான்கு விடயங்களில் குறைந்தது மூன்றுக்குப் பதிலடி தர வேண்டும். இல்லையெனில் என்ன செய்தாலும், என்ன கூட்டணி அமைத்தாலும் 10 இல் 7 முறை உங்களுக்குத் தோல்வி தான் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கூடுதல் அதிகாரம் தலைமைக்கு இருக்க வேண்டும். தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குக் காரணம் மக்கள் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். இது தான் காங்., வெற்றிக்கு காரணம் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்