இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தமது நாட்டிற்குள் நுழைவு அனுமதியை வழங்க இந்தோனேசியா தீர்மானித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்து பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 20 நாடுகளுக்கு இந்தோனேயாவிற்குள் வர விசா அற்ற நுழைவு அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சாண்டியாகோ ஊனோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க முடியும் என நம்புவதாகவும் மேலும், இதன் மூலம் பாரிய முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் அதிக நாட்கள் தங்கும் நோக்கில் வருபவர்களே தமது இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்