கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு
கத்தார் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பான UNCTAD-உம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு 2026 இன்று (25) தோஹாவில் ஆரம்பமாகிறது.
“எதிர்காலத்தில் முதலீடு செய்தல்” (Investing in the Future) என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மன்றத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக, நேற்று தோஹாவில் கத்தார் தேசியக் கொடியும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியும் ஏற்றப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி அஹ்மத் பின் முஹம்மத் அல்-சயீத், UNCTAD பதில் பொதுச் செயலாளர் பெட்ரோ மானுவல் மொரேனோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
உலக நாடுகளின் அமைச்சர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மன்றம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமையவுள்ளது.


