பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
கடும் மழை
இதன்காரணமாக பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.