நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் மஹிந்த கூறினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தி மஹிந்த ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.