தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை 13 ஆம் திகதி வழங்கப்படும் பாடசாலைகளுக்கான இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.