தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜயுடன், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனாலும் நாளுக்கு நாள் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் உலகம் முழுவதும் 7 நாட்களில் அதிகபட்சமாக லியோ திரைப்படம் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin