அட சூப்பர் ஸ்டார் ரஜினியா இது… தீயாய் பரவும் வீடியோ

இவர் ரஜினிதான் என மேலோட்டமாக பார்க்கும் யாரும் நம்பும் அளவுக்கு, ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள நபர் அச்சு அசல் ரஜினியைப் போன்று தோற்றம் கொண்டவராகவும், அவரைப் போன்று ஸ்டைல் செய்பவராகவும் இருக்கிறார்.

வீடியோவில் இருப்பவர் ரஜினிதான் என தெரியாத நபர்கள் பலர், பாருங்கள் ரஜினி சார் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் பவுன்சர்களுடன் கை குலுக்கிக் கொள்கிறார். முடியையும் ரஜினியை போன்று ஸ்டைலாக கோதி விடுகிறார். இவர் யார், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. வீடியோவுக்கு நெட்டிசன்கள் தாறுமாறாக கமென்ட் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு இந்த படம் திரைக்கு வர உள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினியுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்க உள்ளார். மாமன்னன் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த பகத் பாசில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் உடனான படத்தை முடித்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin