மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஸான் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மின் கட்டண அதிகரிப்பு
இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது இன்று பிற்பகல் வேளையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.