8 மாவட்டங்களுக்கு 100 மி.மீ க்கும் அதிக மழை எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு 100 மி.மீ க்கும் அதிக மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் 08 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

 

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் மட்ட வளிமண்டலத் தளர்ச்சி காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மப்பும் மந்தாரமுமான வானிலையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், மாத்தறை, காலி மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த எச்சரிக்கை அறிவித்தலானது, இன்று (15) பிற்பகல் 03 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 03 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin