அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு இலங்கை அமெரிக்கத் தூதரகம் முக்கிய எச்சரிக்கை
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய எதிர்பார்ப்பவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. பயணச் செலவுகள் மற்றும் எதிர்பாராத மருத்துவத் தேவைகளைச் சமாளிப்பதற்குப் போதுமான நிதி வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
விசா நேர்காணலுக்குச் சிறந்த தயாரிப்புடன் சமூகமளிப்பதுடன், அமெரிக்காவில் அரசாங்கத்தின் பொது நலன்புரி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியமின்றிப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதற்கான உண்மையான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசா பெறுவதற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் விசா நிராகரிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான தகுதியும் பாதிக்கப்படலாம் எனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

