இலங்கை – அஜர்பைஜான் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

இலங்கை – அஜர்பைஜான் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

ஆசியாவில் தொடர்பாடல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் (CICA) 7ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அஜர்பைஜானின் பாகு நகருக்குச் சென்றுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

 

விஜித ஹேரத், அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹாம் அலியேவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

2026 ஒக்டோபர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெறும் CICA 7ஆவது உச்சிமாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்குகிறார்.

 

இந்த விஜயத்தின்போது, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட CICA உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் அமைச்சர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

Recommended For You

About the Author: admin