யோஷித ராஜபக்ஷவின் கடற்படைச் சம்பளம் 51 இலட்சம் ரூபாய் – நீதிமன்றத்தில் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் 5,150,626 ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர், அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத் தொகை தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
குறித்த தொகையில் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

