சீனா மற்றும் வடகொரியா நாடுகளின் நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில்,
இரு நாடுகளையும் இணைக்கும் புதிய ‘யாலு நதி’ பாலம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது.
சீனாவின் டாண்டாங் நகரையும், வடகொரியாவின் சினுய்ஜு நகரையும் இணைக்கும் இந்த 3 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலைப் பாலம், கடந்த 2014-ம் ஆண்டே திறக்கப்பட வேண்டியது.
ஆனால், வடகொரிய தரப்பில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாபெரும் பாலம் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் இரு நாட்டு எல்லைகளுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து மற்றும் பொருளாதார உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

