முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்து தருவதாகக் கூறி பண மோசடி செய்த இளைஞர் கைது!

முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்து தருவதாகக் கூறி பண மோசடி செய்த இளைஞர் கைது!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவத்தகம பகுதியில், இணையம் வழியாக வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை இட்டுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிப் பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (14) இரவு மத்திய குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே, ஹோமாகம மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் முகநூல் வணிகக் கணக்கு மூலம் வாகனங்களை விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி, ஒரு வாரத்திற்கு 5,000 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாயும் தொலைபேசி ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், விளம்பரங்களை வெளியிடாமல் குற்றவியல் நம்பிக்கை துரோகம் மற்றும் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin