பாகிஸ்தானில் பாடசாலையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மேற்கூரை வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்ததில், 28 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 350 மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து லேடி ரீடிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பலரின் நிலைமை தீவிரமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் அஞ்சப்படும் நிலையில், இச்சம்பவத்திற்குப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விபத்து குறித்த அதிகாரப்பூர்வ விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

