தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை எற்பாடு செய்துள்ள பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிரான மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று யாழ். சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதிகளில் ஆரம்பமானது.
இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வியாபாரிகள், வாடிக்கையாளர்கள்,பேருந்து பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் நாளைக் காலை 04.10.2023 மருதனார் மடம் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.