யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமானது. இப்போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறும்.
எனவே இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.