தங்க நிலவரம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகின்றமை நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்க விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது.

அதன்பிறகு படிப்படியாக குறைய தொடங் தங்கம் விலையானது ரூ.44,240 ஆக குறைந்தது. தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

இன்று ஒரேநாளில் அதிரடியாக ரூ.560 குறைவு
இந்த நிலையில் இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. நேற்று ஒருகிராம் தங்கம் ரூ.5480-க்கு விற்கப்பட்டது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5410-க்கு விற்கப்படுகிறது. 4 நாட்களில் கிராமுக்கு ரூ.111 குறைந்துள்ளது.

வெள்ளி விலை
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor