” அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் “சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 29.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றுவார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்கள் ” அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் ” என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN