கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைதிருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தார்.

நாட்டில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor