“யாழ்ப்பாணம் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழில். உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (07) வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் களான ஐங்கரன் மீடியா சொலுஷன் பணிப்பாளர் நடராஜா கார்த்திக் தெரிவிக்கையில்,
கண்காட்சியில், கட்டிட நிர்மாணம் தொடர்பான சகல விதமான சேவைகள், விபரங்கள் மற்றும் ஆலோசனைகளோடு, வீட்டு உபகரணங்கள் அவற்றின் பயன்பாடுகள் அடங்கலாக பலதரப்பட்ட விடயங்களும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.
வடக்கில் உள்ள மக்களுக்கு கட்டட நிர்மாணத்துறையில் உலகளா விய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு , பயன்பாட்டில் உள்ள தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து விதமானவையையும் அறிமுகப்படுத்து ம் நோக்குடனேயே இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதில் வடக்கில் உள்ள கட்டட நிர்மானத்துறையினர் உள் ளடங்கலாக இலங்கையின் அனைத்து பாகங்களில் இருந்தும் பலரும் கலந்து கொள்ள உள்ளதனால் , ஒரே இடத்தில் வடக்கு மக்கள் கட்டட நிர்மான துறை தொடர்பான பல்வேறு பட்ட விடயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
நுழைவு சீட்டு கட்டணமாக 50 ரூபாய் அறவிட தீர்மானித்து உள்ளோம்.
இதேவேளை கட்டட நிர்மான துறை தொடர்பிலான வல்லுநர்களினால் இலவச கருத்தரங்கை நடாத்தவுள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினரின் ஒரு காட்சி கூடம் அங்கு அமைக்கப்படவுள்ளது. அங்கு அதிகாரிகள் இருப்பார்கள் , அவர்கள் ஊடாக கட்டடங்களை நிர்மானிப்பதற்கு , நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் எவ்வாறு அனுமதி பெற வேண்டும் என்பவை தொடர்பில் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறாக கட்டட நிர்மான துறை தொடர்பிலான அனைத்து விதமானவற்றையும் ஒரே இடத்தில் பார்வையிட கூடியவாறும் அவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து பயன் பெறுங்கள் என தெரிவித்தார்.