யாழில் தனது வீட்டில் வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்ருள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவ் இளைஞரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.