இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்திருத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவில் சரணடைந்த சச்சித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.