யாழ் வீடொன்றில் திருடர்கள் கைவரிசை!

யாழில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீட்டிலேயே நேற்றிரவு (07) திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருடப்பட்ட பொருட்கள்
அந்த வீட்டில் இருந்த 10ஆயிரம் ரூபா பணம், 1/4 பவுண் தோடு, 1/4 பவுண் மோதிரம் மற்றும் காஸ் சிலிண்டர் ஒன்று என்பன களவாடப்பட்டுள்ளன.

அந்த வீட்டின் சமையறையானது வீட்டிற்கு 20 மீற்றர்கள் தள்ளி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த மேற்படி பணம் மற்றும் பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor