நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையிலிருந்து முதற் தடவையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவு!

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வெளியிடப்பட்டன க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி மருத்துவத் துறைக்கு குணசேகரம் ஜனுசிகா தெரிவு செய்யப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் தெரிவித்தார்.

உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்ற ஜனூசிகா உயிரியல், இரசாயனவியல் பாடங்களில் ஏ சித்திரையில், பெளதீகவியல் பாடத்தில் பீ சித்தியையும் பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் 26 வது இடத்தையும் பெற்றுள்ள இவர் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 09 A பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin