வெள்ளப் பாதிப்புக்கு தீர்வு கோரி கிட்டங்கிப் பாலம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் கேள்வி

வெள்ளப் பாதிப்புக்கு தீர்வு கோரி கிட்டங்கிப் பாலம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் கேள்வி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிட்டங்கிப் பாலத்தை வெள்ள நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நிர்மாணிப்பதற்கு இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (23) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

நாளை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் கேட்பதற்காக அவர் சமர்ப்பித்துள்ள வினாவிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வெள்ள நிலைமைகளின்போது கிட்டங்கிப் பாலம் நீரில் மூழ்குவதால் நாவிதன்வெளி, மத்திய முகாம், நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை அமைச்சர் அறிவாரா என அந்த வினாவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அவ்வாறு அறிந்திருப்பின் வெள்ள நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா எனவும் இன்றேல் அதற்கான காரணம் என்னவென்றும் உதுமாலெப்பை எம்பி தனது வினாவில் மேலும் கேட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin