ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மகனால் கலங்கி நிற்கும் குடும்பம்

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொடிமாத்தையா சந்திரசேன அனச்ராஜ் (வயது 21) என்பவராவார். மரணம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor