சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக நிலையில் இலங்கையில் எரிபொருட்களின் வேலைகள் குறையுமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 27 சென்ட்கள் அல்லது 0.4% குறைந்து, 00.19 GMT மணிக்குள் ஒரு பீப்பாய் 74.01 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 29 சென்ட் அல்லது 0.4% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 69.13 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
இதன்போது கடந்த வாரம் ஏமாற்றமளிக்கும் பொருளாதார தரவுகளுக்குப் பிறகு சீனப் பொருளாதாரம் பற்றிய கவலைகளால் விலைகள் திங்களன்று 4% குறைந்துள்ளன.
எனினும் சீனாவின் மத்திய வங்கி குறுகிய கால கடன் விகிதத்தை குறைத்த பிறகு எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் செவ்வாயன்று இரண்டு வரையறைகளும் 3%க்கு மேல் உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.