கடந்த வாரத்துடன் (12-04-2023) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (17-04-2023) நிலையானதாகவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 309.66 ரூபா, 328.25 ரூபாவாக உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310.05 ரூபா, 327.50 ரூபாவாக உள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310 ரூபா, 325 ரூபாவாக உள்ளது.