தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி,
◾Fast3Cycle International Pvt Ltd
◾Sport Chain App Sport Chain ZS Society
◾Srilanka Onmax DT ஆகிய தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மத்திய வங்கி விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் மேற்படி 3 நிறுவனங்களும் அவற்றின் பணிப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் மற்றும் நிறுவனர்களும் பிரிவுக்கு முரணாக செயற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்துள்ளது.