அரச ஊழியர்களுக்கு ஏற்பாடுள்ள சிக்கல்!

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிற்கு ஒன்றிணைந்த கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடிதத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச சேவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியாயமான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த பொது நிர்வாக அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு, இந்த அலுவலர்கள் இதுவரை பெற்ற கூட்டுச் சம்பளத்தில் நியாயமான சதவீதம் மார்ச் 9 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும்.

மேலும், தேர்தல் திகதி வரை அனைத்து வகையான கடன்கள் மற்றும் சம்பளத்தில் வசூலிக்கப்படும் கடன் மற்றும் வட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor