இலங்கைக்கு பல சர்வதேச வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள லூசியன் புஷ்பராஜ், இன்று அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ‘அர்னால்ட் கிளசிக்’ உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
ஒகையோவில் நடைபெறும் செம்பியன்ஷிப் போட்டியில் புஷ்பராஜ் ‘சுப்பர் ஹெவிவெயிட்’ பிரிவில் போட்டியிடுகிறார்.
அர்னால்ட் கிளசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை தடகள வீரரான புஷ்பராஜ் கடந்த பதிப்பில் நான்காவது இடத்தில் இருந்தார்.
2012ஆம் ஆண்டு முதல் இலங்கை பட்டம், ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் புஷ்பராஜ் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.