விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் – டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2 ஆம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 12,490,309 விடியோக்களை டிக்-டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக் – டாக் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி விடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவை நீக்கப்பட்டுள்ளதாக டிக்-டாக் விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதையொட்டி டிக் – டாக் பாதுகாப்பு குழு 41,191 விடியோக்களை நீக்கியது. இதில் 87 சதவிகிதம் விடியோக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொய்யான தகவல்கள் அடங்கியது