தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை ( 2022 ) முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி இன்று மாலை முதல் ஆரம்பித்துள்ளது.
இந்த மலர்க் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர் என். சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், பா. கஜதீபன், சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ். ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.