ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை மாநாட்டில் யாழ்ப்பாண இளைஞன் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு Forth way ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தும் சிறுவர்கள் போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை உள்ளவர்கள் எனும் தலைப்பிலான செயலமர்வு மூன்று நாட்கள் இந்தியா திருவானந்தபுரத்தில் இடம்பெறுகின்றது.
குறித்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து போதை வஸ்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் முதன்மை செயற்பாட்டாளர் தவராஜா பிரமேஸ் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.