4 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு; இரண்டு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு டிசம்பர் 04 வரை விளக்கமறியல்
சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாகக் கூறி பணம் திரட்டி, சுமார் 4 பில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவரும் டிசம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் கொஹுவல பகுதிகளில் இயங்கிய நிறுவனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

