65 நாட்கள் சூரிய உதயமே இல்லை! அலாஸ்கா நகரில் தொடங்கிய துருவ இருள்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரில், 2026 ஆம் ஆண்டிற்கான கடைசி சூரிய அஸ்தமனம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து துருவ இருள் (Polar Night) காலம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக, அந்நகரில் வாழும் மக்கள் சுமார் 65 நாட்களுக்கு சூரியன் அடிவானத்திற்கு மேலே உதிப்பதைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2026 நவம்பர் 18 ஆம் திகதி கடைசி சூரிய அஸ்தமனத்தைக் கண்ட இந்த நகரில், 2027 ஜனவரி 23 ஆம் திகதியே மீண்டும் சூரிய உதயம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காலப்பகுதியில் நண்பகல் நேரத்தில்கூட முழுமையான பகல் வெளிச்சம் இருக்காது. மங்கலான இயற்கை வெளிச்சமும் தெருவிளக்குகளின் ஒளியுமே அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன.
இருப்பினும், அங்குள்ள மக்கள் வழக்கம்போல் தமது அன்றாடப் பணிகள், கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த இயற்கை நிகழ்வு ‘துருவ இரவு’ (Polar Night) என அழைக்கப்படுகிறது.
சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூரிய உதயமின்றி வாழும் அலாஸ்கா மக்களின் வாழ்க்கை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

